சமூக ஊடகங்களில்

முத்தலாக் மசோதா: ஒரு சந்தேகம்


ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி திருமணத்தை ரத்து செய்கிற முறையை உச்சநீதிமன்றம் சட்டவிரோதம் என்று ஏற்கெனவே கூறியுள்ளது. ஆகவே அப்படிச் செய்யும் விவாகரத்து செல்லாது, திருமண பந்தம் தொடரும். இந்த நிலையில் அதைச் செய்யும் கணவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை என்று சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? இது சிவில் விஷயத்தை கிரிமினல் விவகாரம் ஆக்குவது அல்லவா? இது தேவையா? எனவே இது பற்றி நிதானமாக ஆராய இந்த மசோதாவை நிலைக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் எம் பி தோழர் முகம்மது சலீம். (டிஒஐ ஏடு) எனக்கு ஒரு சந்தேகம். இந்து திருமண சட்டமானது பலதார மணம் போன்றவற்றை தடை செய்துள்ளது. அதை மீறும் கணவருக்கு இப்படி 3 ஆண்டு சிறைத் தண்டனை உண்டோ? வழக்கறிஞர் யாரேனும் இதை நிவர்த்தி 
செய்தால் நன்றாக இருக்கும்.


பாஜகவோடு பாமக கூட்டு?



"திமுக, அதிமுக தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் கூட்டு சேருவோம்" என்று மருத்துவர் ராமதாஸ் கூறியிருக்கிறார். (நியூஸ் 7) அப்படியெனில் பாஜக வந்தாலும் சேர்த்துக் கொள்வார்! அதன் மதவெறி பற்றியோ, அது தமிழகத்திற்கு செய்யும் துரோகம் பற்றியோ கவலை இல்லை! இவரின் திராவிட இயக்க, தலித் விரோதப் போக்கு கடைசியில் பாமகவை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது பார்த்தீர்களா?


தன்னைத்தானே அடித்துக் கொள்ளும் மோடி!



குஜராத் தேர்தலுக்கு ராமர் போதாது என்று பாகிஸ்தானை இழுத்தார் மோடி. ஆனால் பாகிஸ்தானிடமிருந்து மட்டுமல்லாது மன்மோகன் சிங்கிடமிருந்தும் வாங்கிகட்டிக் கொண்டிருக்கிறார். மணிசங்கர் ஐயர் தகாத வார்த்தை எனும் சாட்டையைத் தந்ததை வாங்கி காங்கிரஸ் தலைவர்களை வெளுத்து வாங்குவார் என்று பார்த்தால் தன்னைத்தானே அடித்து கொள்கிறார் என்று கருத்துப்படம் போட்டு கேலிசெய்திருக்கிறது"தி இந்து". அவர் தன்னைத்தானே அடித்துக் கொள்வதில் ஆட்சேபணை இல்லை
தான். ஆனால் பிரதமாக இருப்பதால் நாடு தலைகுனிந்து நிற்கிறதே

Comments