சீனாவின் நோக்கிலிருந்து சீனா

சீனாவின் நோக்கிலிருந்து சீனா -1



எனது சீன பயண அனுபவங்கள் பற்றி 

"இந்திய-சீன நட்புறவுக் கழக"த்தில் 
பேசினேன். அவ்வமயம் அந்த அமைப்பினர் இரண்டு நூல்களைப் பரிசாகத் தந்தார்கள்: 1."ஜனநாயகத்தின் ஆற்றல்"(2012) 2."சீனாவை நிர்வகித்தல்" (2014) இந்த இரு நூல்களைப் படித்ததில் அந்த நாட்டின் தற்போதய அரசியல் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பு பற்றிய அவர்களது வாதம் பெருமளவு புரிபட்டது. அவர்களது கட்டமைப்பை நாம் ஏற்கிறோமோ இல்லையோ முதலில் அவர்களது கோணத்திலிருந்து அதைப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கு உதவும் வகையில் சீனா வெளியிட்டுள்ள அந்த நூல்களிலிருந்து சில கூறுகளைப் பதிவு செய்கிறேன்.

சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியின் ஒரு கட்சி ஆட்சிமுறை உள்ளது, இது எப்படி மெய்யான ஜனநாயகம் ஆகும் எனும் கேள்வி உலகில் பரவலாக எழுப்பப் படுகிறது. இந்திய கம்யூனிஸ்டுகளாகிய நாமும் இதை எதிர்கொள்கிறோம். 

இதுபற்றி முதல்நூல் விரிவாக அலசுகிறது. சீனாவில் உழைப்பாளி மக்களின் புரட்சியை 1949ல் வெற்றிகரமாக நடத்திக் காட்டியது அந்நாட்டு கம்யூனிஸ்டு கட்சியே. ஆனாலும் ஆட்சி அதிகாரம், அரசு நிர்வாகம் என வரும்போது அது கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்க முடியாது, இருக்க கூடாது என்று முடிவுகட்டியதும் அதே கம்யூனிஸ்டு கட்சிதான். இதை மாவோ 
மற்றும் சூஎன்லாய் வாக்குகள் வழியாக நினைவுபடுத்துகிறார்கள். 
1956ல் மாவோ கூறினார்: "ஒரு கட்சியா அல்லது பல கட்சிகளா? எது நல்லது? தற்போது, பல கட்சிகள் இருப்பதுதான் நல்லது என்று நான் நினைக்கிறேன். கடந்த காலத்திலும் இது நல்லதாக இருந்தது, எதிர்காலத்திலும் நல்லதாக இருக்கும் என்று 
நினைக்கிறேன்.அதாவது, நீண்டகாலத்திற்கு இந்த சகவாழ்வும் பரஸ்பர கண்காணிப்பும் இருக்கும்". சூஎன்லாய் கூறினார்: "நமது கட்சி இருக்கும்வரை ஜனநாயக கட்சிகளும் இருக்கும். அரசியல்கட்சிகளுக்கு தேவையே இல்லாத அளவுக்கு சமூக வளர்ச்சி ஏற்படும் வரை அவை சகவாழ்வு வாழும்". இந்த நோக்கிலிருந்துதான் "சீன மக்களின் அரசியல் கலந்தாய்வு மாநாடு" எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
அதில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் பிரதிநிதிகளும் இதர அரசியல் கட்சிகளின் 
பிரதிநிதிகளும் இடம் பெற்றார்கள். அங்கே முக்கியமான அரசு கொள்கைகள் 
விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன. அதுபோல முக்கியமான அரசபதவிக
ளுக்கான நபர்களும் நிச்சயக்கப்பட்டார்கள். இது "சீன கம்யூனிஸ்டுகட்சி தலைமையிலான பலகட்சி ஒத்துழைப்பு" என அழைக்கப் பட்டது. "துரதிருஷ்டவசமாக 1957ல் வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டம் விரிவடைந்தபோது இந்த பலகட்சி ஒத்துழைப்பும் அரசியல் கலந்தாய்வு முறைமையும் பாதிப்புக்கு உள்ளாயின, 'கலாச்சாரப் புரட்சி' காலத்தில் அவை நின்றே போயின" என்கிறது அந்தநூல். பிறகு என்னானது?





2

மேற்கே ரக்பி விளையாட்டு சீனாவில் சேர்ந்திசைக் குழு

1960 களில் நடந்த "கலாச்சாரப் புரட்சி" எனும் அதிதீவிரவாதத்தால் பாதிப்புக்கு ஆளான இதர ஜனநாயகக் கட்சிகளுடனான அரசியல் கலந்தாய்வு 1978ல் சீன கம்யூனிஸ்டு கட்சியில் (சீகக) எழுந்த டெங் சியோ பிங் தலைமையினால் மீட்டெடுக்கப் பட்டது. 1982ல் நடந்த கட்சியின் தேசிய மாநாடு இந்த கலந்தாய்வுக்கு 16 அம்ச கொள்கையை உருவாக்கியது. அதை அஸ்திவாரமாகக் கொண்டுதான் இன்றுவரை அங்கே பல கட்சிகள் இயங்கி வருகின்றன. அது பற்றி அந்த நூல் கூறுவதைக் கேளுங்கள்: "சீகக வின் தலைமையிலான பலகட்சி ஒத்தழைப்பு மற்றும் அரசியல் கலந்தாய்வு முறை மேற்கத்திய நாடுகளில் நிலவும் இருகட்சி அல்லது பலகட்சி போட்டி முறையிலிருந்து வேறுபட்டது. அதுபோல சில நாடுகளில் நிலவும் ஒருகட்சி ஆட்சி முறையிலிருந்தும் மாறுபட்டது. இதன் அடிப்படைத் தன்மை வருமாறு: 'ஆளுங்கட்சியாக சீகக இருக்க அரசு மற்றும் அரசாங்க விஷயங்களில் பலகட்சிகளின் பங்கேற்பு உள்ளது". அதாவது சீனாவில் பல கட்சிகள் இயங்கினாலும் அவை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாணியில் அல்லாது 
அரசு கட்டமைப்பில் அனைத்து கட்சிகளும் பங்கேற்பு எனும் விதமாக இயங்குகி
ன்றன. இதிலே கம்யூனிஸ்டு கட்சிக்கு தலைமை பாத்திரம் உள்ளது. இது பற்றி 
"சீன தேசிய ஜனநாயக கட்டமைப்பு சங்கம்" எனும் கட்சியின் தலைவர் செங் சிவைவ் கூறியது:" மேற்கத்திய நாடுகளில் உள்ள அரசியல் முறையானது ரக்பி விளையாட்டு போல; ஓர் அணி இன்னொரு அணியை வென்றாக வேண்டும். எங்களுடையது சேர்ந்திசைக் குழு போன்றது; அதற்கு ஓர் ஒருங்கிணைப்பாளர் தேவை. அந்த பணியைத்தான் சீகக செய்து வருகிறது". அரசு மற்றும் அரசாங்க பணிகளில் இத்தகைய கட்சிகளின் பங்கேற்பு எந்த அளவுக்கு உள்ளது?





3

அரசமைப்பில் 8 அரசியல் கட்சிகளின் பங்கேற்பு

சீனாவில் கம்யூனிஸ்டு கட்சி தவிர இன்னும் 8 அரசியல் கட்சிகள் உள்ளன.
இவற்றோடு கம்யூனிஸ்டு கட்சி உயிர்ப்பான உரையாடலை நடத்தி வருகிறது.
"முக்கியமான முடிவுகளை எடுக்கும்முன், முக்கியமான ஆவணங்களை வெளி
யிடும்முன், முக்கியமான பதவிகளுக்கு நபர்களை நியமிக்கும்முன் ஜனநாயக 
கட்சிகளுடன் அரசியல் கலந்தாய்வுகளை நடத்துவது சீனாவின் அரசியல் வழ
மையாக உள்ளது.1990முதல் 2006வரை 230 க்கும் மேற்பட்ட கலந்தாய்வு கூட்டங்
களை, கருத்தரங்குகளை, ளக்கவுரைகளை நடத்தியிருக்கின்றன சீகக வின் மத்தியகுழு, அரசு கவுன்சில் மற்றும் துறைகள். இவற்றில் 74 கூட்டங்களுக்கு சீகக மத்தியகுழுவின் பொதுச்செயலாளர் தலைமை வகித்திருக்கிறார்"என்கிறது அந்த நூல். அரசியல் கட்சிகளுடன் கலந்தாய்வு என்பது பேச்சளவில் இல்லாது செயலளவில் உள்ளது. சரி, வெறும் கலந்தாய்வுதானா? அரசமைப்பில் இந்த கட்சிகளுக்கு பங்கு உண்டா? நூல் தொடர்ந்து கூறுகிறது: " 2009 இறுதியில் முக்கியமான பதவிகளில் இருக்கும் ஜனநாயக கட்சிகளின் உறுப்பினர்
கள் மற்றும் எந்த கட்சியிலும் இல்லாதவர்களின் எண்ணிக்கை 32000 த்தை
எட்டியது. அவர்களில் 18 பேர் சுப்ரீம் மக்கள் நீதிமன்றம், சுப்ரீம் மக்கள் புரகுயு 
ரேடரோட், அமைச்சகங்கள், அரசுகவுன்சில் குழுக்கள் ஆகியவற்றின் துணைத் 
தலைவர்கள் பதவிகளை வகித்தார்கள். நாட்டின் 31 மாகாணங்கள், சுயேச்சை 
பகுதிகள், நகராட்சிகள் ஆகியவற்றின் துணை கவர்னர், துணைத் தலைவர்,
துணை மேயர் பதவிகளில் 30 பேர் நியமிக்கப்பட்டார்கள். 19 மாகாணங்கள் 
அல்லது சுயேச்சை பகுதிகளில் அல்லது நகராட்சிகளின் உயர்பதவிகளில் 33 
பேர் நியமிக்கப் பட்டார்கள்". இதற்கு அடுத்தகட்ட நிலைகளில் இதர அரசியல்
கட்சியினர் உள்ள விபரத்தையும் சொல்லிச் செல்கிறது நூல். ஆக, இதுவும்
பேச்சளவில் இல்லை; நடப்பிலும் அரசமைப்பில் இவர்களுக்கு இடம் கொடுக்
கப்பட்டுள்ளது. ஆக நிச்சயமாக இது ஒருகட்சி ஆட்சிமுறையும் அல்ல பலகட்சி
ஆட்சிமுறையும் அல்ல. இரண்டின் கூறுகளையும் கொண்ட வினோத புது 
முறை. ஆனால் இதை மேற்கத்திய அறிவுஜீவிகள் ஜனநாயகம் என ஏற்கமாட்
டார்கள் என்பது நிச்சயம். அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும் ரஷ்யாவிலும் பலகட்சி நாடாளுமன்றம் எனும் ரக்பி விளையாட்டு வந்தபிறகு சீனாவில் மட்டும் இந்த சேர்ந்திசை தொடருமா? இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, அரசியல் கட்டமைப்பு முறையின்
அஸ்திவாரம் பொருளாதார கட்டமைப்பு முறையில் இருக்கிறது என்பது சமூக
வியலின் பாலபாடம். சீனாவின் பொருளாதாரக் கட்டமைப்பு எத்தகைய வடிவு எடுக்கிறது என்பதைப் பொறுத்தே அதன் அரசியல் கட்டமைப்பின் எதிர்காலம் 
இருக்கும் எனலாம்.





4

தேசியஇனப் பிரச்னையை எதிர்கொள்ளும் விதம்

உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகிய சீனாவின் 92% பேர் ஹேன் எனும் ஒரே தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள். மற்றவர்கள் 55 சிறுசிறு தேசியஇனங்களைச் சார்ந்தவர்கள். இந்த யதார்த்தத்தை கணக்கில் கொண்டு தனக்கென ஒரு சொந்த தேசியஇனக் கொள்கையை வகுத்துக் 
கொண்டதாக சீனா கூறுகிறது: "தொடர் ஆய்வுகள் மற்றும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, சமஷ்டி முறையை ஏற்ற முதல் சோசலிச நாடாகிய சோவியத் ஒன்றியத்தின் அனுபவத்தை சீகக நகல் எடுக்கவில்லை. மாறாக சுயாட்சி முறை என்பதை சிறுபான்மை தேசியஇனங்கள் வசிக்கும் பகுதிகளில் சிருஷ்டிகரமாக அமுல்படுத்தியது. தேசியஇனங்களின் சமத்துவம் மற்றும் ஒருமைப்பாடு பற்றிய மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையில்
அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பல்தேசியஇனக் குடியரசு என்று புதிய 
சீனாவை கட்சி வரையறை செய்தது". இதன் அர்த்தம் பிரிந்துபோகிற உரிமை கொண்ட சுயநிர்ணயம் எனும் சோவியத் ஒன்றியத்தின் நிலைபாடு தனக்குப் பொருந்தாது என்று சீனா முடிவுகட்டியது. சிறுபான்மை 
தேசியஇனங்களுக்கு சுயாட்சி என்பது எப்படி நடைமுறைப்படுத்தப் பட்டது?
அந்த நூல் கூறுகிறது: "2000 ம் ஆண்டு புள்ளிவிபரப்படி 55 சிறுபான்மை
தேசியஇனங்களில் 44 க்கு சுயாட்சி பிரதேசங்கள் அமைத்து தரப்பட்டன.
இது சிறுபான்மை தேசியஇன மக்களில் 71%பேரை உள்ளடக்கியது. இதற்கு
முன்பு திபேத்தில் ஒரு ரோடுகூட கிடையாது. இப்போது அங்கே ஒவ்வொரு துறையிலும் நவீனபுரட்சிகள் நடந்திருக்கின்றன என்று 2007ல் திபேத்திற்கு வருகை புரிந்த 'தி இந்து' பத்திரிகையாளர் கிருஷ்ணமேனன் எழுதினார்". சுயாட்சி பிரதேச ஆட்சிமுறையில் சிறுபான்மை தேசிய இனங்கள் பெரும் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளன என்பதற்கு மேலும் பல விபரங்களைத் தந்துள்ளது அந்த நூல். எனினும் மொழிப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்பதும் மிக முக்கியமானது. அது எப்படி உள்ளது? நூல் தொடர்கிறது:
"55 தேசியஇனங்களில் ஹூய் மற்றும் மஞ்சு இனங்கள் ஹேன் மொழியை ஏற்றுள்ளன. இதர இனங்கள் தங்களின் சொந்த மொழிகளைக் கொண்டுள்ளன. அவற்றில் 22 மொழிகள் 28 வரிவடிவங்களைக் கொண்டுள்ளன. 
தற்போது, சிறுபான்மை தேசிய இனத்தவர்களில் 6 கோடிபேர் தமது சொந்த 
மொழியை பயன்படுத்துகிறார்கள். சுமார் 3 கோடிபேர் தமது சொந்த வரிவடிவங்களைப் பயன்படுத்துகிறார்கள்". ஆக சீனா தனக்கான சொந்தவழியில் தேசியஇனப் பிரச்னையை எதிர்கொள்கிறது. தேசியஇனங்களுக்கிடையே சமத்துவம் எனும் பொதுவான மார்க்சிய வழிகாட்டல் உள்ளது. 
அதை நாடுகள் தத்தம் சொந்த நிலைமைகளுக்கு ஏற்பவே அமுல்படுத்துகி
ன்றன என்பதையே சீனாவின் நடப்புகளும் உணர்த்துகின்றன.




5

மதம்: மூடநம்பிக்கையா? பண்பாடு சம்பந்தப்பட்டதா?

சீனாவில் மதச் சுதந்திரம் இருக்கிறதா எனும் கேள்வியும் பரவலாக எழுப்பபடுகிறது. இதற்கும் பதில் சொல்கிறது அந்த நூல். "சோசலிச முறைமைக்கும் இதர சமூக முறைமைகளுக்கும் இடையிலான ஓர் அடிப்படையான வேறுபாடு ஒரு சோசலிச நாட்டின் ஆளுங்கட்சி வரலாற்று பொருள்முதல்வாதம் மற்றும் (நாத்திகம் உள்ளிட்ட) இயங்கியல் பொருள்முதல்வாதத்தை ஏற்றிருப்பது" என்று முதலில் அது கூறுகிறது. உலகின் மிக அதிக மக்கள் தொகையைக் கொண்ட 
நாட்டின் ஆளுங்கட்சியானது தான் அறிவியல்பூர்வ நாத்திகத்தை ஏற்றிருப்பதா
கக் கூறுவதைப் படிக்கவும் நம் மனம் பூரிக்கிறது. அதேநேரத்தில் அது இந்தக் 
கேள்வியையும் எழுப்புகிறது: "கடவுள் நம்பிக்கை இல்லாத ஓர் ஆளுங்கட்சி மதம் 
பற்றிய பிரச்னையை, அதாவது மதத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான 
உறவுகளைச் சரிக்கட்டுவது எனும் பிரச்னையை எப்படிக் கையாள வேண்டும்?"
கூடவே அது இப்படியும் கூறுகிறது:"அடுத்தடுத்து உருவான சோசலிசநாடுகளின் அனைத்து ஆளுங்கட்சிகளும் இந்த பிரச்னையை எதிர்கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை பொதுவாக அதில் தோற்றுப் போயின. 
அந்த சிக்கலான பணி சீகக வின் தோளில் விழுந்தது". சீனக் கட்சி இந்த பிரச்
னையை புரட்சி நடந்த காலத்திலேயே கையாள துவங்கியது. குறிப்பாக மாவோ
இது பற்றி தீவிரமாக யோசித்தார். ஒருமுறை அவர் நடைப்பயிற்சி மேற்கொண்
டிருந்த போது வழியிலிருந்த ஒரு கோயிலைப் பார்க்க விரும்பினார். அதிர்ந்து
போன பாதுகாவலர் "தோழர் இது மூடநம்பிக்கை" என்றார். "உங்களுக்கு ஏனிந்த குறுகிய புத்தி? இது பண்பாடு சம்பந்தப்பட்டது" என்றார் மாவோ. இந்த நிகழ்வை குறிப்பிட்ட அந்த நூல் அடுத்து கூறியது: "இப்படி அவர் கூறியது ஒருபுறம் மேலாட்டமானது, மறுபுறம் ஆழமானது". இதன் பொருள் மத நம்பிக்கை பன்மைத்
தன்மை கொண்டது, அதை லேசாகவும் நினைக்க கூடாது, முரட்டுத்தனமாகவும் 
கையாளக் கூடாது என்பதாகும்.




6

மதப்பற்றாளர்களும் மதச் சுதந்திரமும்

"நிர்வாக உத்தரவுகள் மூலம் நாம் மதத்தை அகற்றிவிட முடியாது.அல்லது மதத்தை 
நம்பாதே, ஆத்திகத்தை கைவிட்டு மார்க்சியத்தை நம்பு என்று மக்களை நாம் நிர்பந்திக்க முடியாது" என்றார் மாவோ. சீனாவின் அரசியல்சாசனம் பிரிவு 36 கூறுகிறது:
"சீன மக்கள் குடியரசின் குடிமக்களுக்கு மத நம்பிக்கை சுதந்திரம் உண்டு. மதத்தை 
நம்பு என்றோ அல்லது மதத்தை நம்பாதே என்றோ எந்தவொரு அரசு அமைப்போ, 
சமூக குழுக்களோ, தனிநபர்களோ மக்களை நிர்பந்திக்க கூடாது, மத நம்பிக்கை 
உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்று பாகுபாடு காண்பிக்கவும் கூடாது". ஆனால் 
1950களுக்கு பிறகு இந்த சரியான நிலைபாட்டுக்கு சீகக வில் எழுந்த அதீத இடதுசாரிவாதம் இடையூறு செய்தது, பத்தாண்டு 'கலாச்சாரப் புரட்சி'யானது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியது என்கிறது அந்த நூல். பிறகுதான் தேர் நிலைக்கு வந்து, 
மீண்டும் மதம்பற்றிய பழைய சரியானநிலைபாடு மீட்டெடுக்கப்பட்டது என்றும் பெருமையோடு நினைவு கூர்கிறது. இன்றைய நிலை என்ன? 2001ல் மதம் பற்றி கட்சிக்குள் ஓர் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதுகூறியது: "மத இருப்புக்கான வர்க்க ஆதாரத்தை களைவதற்கு ஒரு சோசலிச முறைமையை நிலைநிறுத்த வேண்டியது அவசியம் எனப் படுகிறது.ஆனால் அதன்இருப்புக்கான சமூக ஆதாரம்,இயற்கை ஆதாரம், சிந்தனை ஆதாரம் ஆகியவற்றை களைய மிகவும் நீண்ட ஒரு 
சரித்திரகாலகட்டம் தேவை.மதம் முற்றிலுமாகமறைய வர்க்கங்கள் மற்றும் அரசுகள் மறைவதற்கான காலத்தைவிட கூடுதல் காலம் எடுக்கும்".மிகச்சரியான மதிப்பீடாக தெரிகிறது. ஆனால் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் புரட்சிநடந்த இந்த 68 ஆண்டுகளிலேயே சீனா இது விஷயத்தில் சாதித்தது தாரணமானது அல்ல. அந்த நூல் தரும் இந்த புள்ளிவிபரத்தை நோக்குங்கள்: "சீனாவில் இப்போது10 கோடி மதப்பற்றாளர்களும், 360000 மதப்பிரச்சாரகர்களும் உள்ளனர்.130000 மதச்செயல்பாடுகள் நடக்கும் இடங்கள், 5500 திற்கு மேற்பட்ட மதக் குழுக்கள்,110 திற்குமேற்பட்ட மத நிறுவனங்கள் உள்ளன. உதாரணமாக, சின்சியாங்கில் 24300 மசூதிகள் உள்ளன; 28000 முஸ்லிம் போதகர்கள் உள்ளனர். திபேத்தில் 1700 க்கும் மேற்பட்ட மதவழிபாட்டு தலங்கள் உள்ளன;சுமார் 46000 பிக்குகளும் பிக்குணிகளும் உள்ளனர். மேலும் ஒவ்வொரு 
மதத்திற்கும் வெளியீட்டகம் உண்டு. உதாரணமாக 1980 க்கு பிறகு சீன கிறிஸ்தவ 
கவுன்சில் 7 கோடி பிரதி பைபிளை அச்சிட்டு விநியோகித்துள்ளது". இவ்வளவு மதச் 
சுதந்திரம் கொடுக்கப்பட்டும் 130 கோடிப் பேர் வாழும் சீனாவில் 10 கோடிப் பேர்தான்
மதப்பற்றாளர்கள் என்றால் அது மகத்தானசாதனை அல்லவா?இதற்கு மூலகாரணம் கட்சியின் அறிவியல்பூர்வ நாத்திக நோக்கும், மக்களின் சமூகபொருளாதார வாழ்வில்
ஏற்பட்டுள்ள மாற்றங்களும். மதப் பிரச்னைக்கு மெய்யான தீர்வு மார்க்சியத்தில்தான் உண்டு என்பதை சீனா நிரூபித்துக் கொண்டிருக்கிறது.




7

"சீனாவின் கனவுகள்" என்ன தெரியுமா?

இந்திய-சீன நட்புறவுக் கழகத்தினர் எனக்கு கொடுத்த "சீனாவை நிர்வகித்தல்"
நூல் சீகக வின் பொதுச்செயலாளர் ஷி ஜின்பிங் ஆற்றிய உரைகள், அளித்த 
பேட்டிகளின் தொகுப்பு. காலம் 2012-2014. அதன் வழியாக சீகக வின் இன்றைய
சமூக- பொருளாதாரச் சிந்தனைகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 
கட்சியின் அடிப்படையான கோட்பாடு: "சீனத் தன்மைகளுடனான சோசலிசம்".
இதற்கு மாசே துங், டெங் சியோபிங், ஜியாங் ஜெமின் எனும் மூன்று தலைமுறை
தலைவர்களும் பங்களித்திருப்பதாக கட்சி கருதுகிறது. "சீனாவின் கனவுகள்" 
என்ன தெரியுமா? "2021 ல் சீககவின் நூற்றாண்டு வரும்போது ஒரு சுமாரான 
வளமிக்க சமுதாயத்தை கட்டமைத்திருப்பது, 2049 ல் சீன மக்கள் குடியரசின் 
நூற்றாண்டு வரும்போது வளமிக்க, ஜனநாயகபூர்வமான, பண்பாடுரீதியாக 
முன்னேறிய மற்றும் ஒருங்கிணைந்த நவீன சோசலிச நாட்டை கட்டமைத்தி
ருப்பது". இப்படி உடனடி மற்றும் தொலைநோக்கு கனவுகளை கொண்டு சீனா
வை நிர்வகித்து வருகிறது அந்நாட்டு கம்யூனிஸ்டு கட்சி. ஒரேயடியான தாவுத
லும் அல்ல, தேங்கிநிற்பதும் அல்ல. இந்த நிதானமான நிலைபாடு தற்போதைய 
சமூக-பொருளாதார வாழ்வு பற்றி ஒரு யதார்த்தமான மதிப்பீட்டையும் தந்துள்
ளது. அது-"சீனா சோசலிசத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது". எந்தநாட்டை பற்றி 
தெரியுமா? "சீனாவின் பொருளாதாரம் உலகின் இரண்டாவதுஇடத்தை எட்டியுள்
ளது; அதனது பல பிரதான பொருளாதார குறியீடுகள் உலகப் பட்டியலில் உயர் 
இடங்களை வகிக்கின்றன" எனும் நாட்டைப்பற்றி! இது அடக்கத்தால் எழுந்த 
மதிப்பீடு அல்ல. உற்பத்தி பெருக்கம் சோசலிசத்திற்கான அஸ்திவாரம் என்றா
லும், அது மட்டுமே சோசலிசம் ஆகிவிடாது, மாறாக நியாயமான விநியோகம் 
மற்றும் பன்முக வளர்ச்சியும் இணைந்தது சோசலிசம் என்பதை உணர்ந்திருப்ப
தால் இந்த மதிப்பீடு.




8

கனவுகளை நனவாக்க ஒரு திறவுகோல்
சீனா தனது கனவுகளை நனவாக்க எதை நம்பியிருக்கிறது? 

1978 ல் அது 
துவக்கிய "சீர்திருத்தம் மற்றும் திறந்துவிடல்" கோட்பாட்டைத்தான். அதுதான் 
தற்போதைய வளர்ச்சிக்கு காரணம் என்று அது நம்புகிறது. இப்போதும் சில முக்கியமான பிரச்னைகள் இருப்பதை அது மறுக்கவில்லை. ஷி ஜின்பிங் 
வாயிலாகவே அதைக் கேட்போம்: "சமனற்ற, ஒருங்கிணைக்கப்படாத, நிரந்தர
மற்ற வளர்ச்சி என்பது ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. அறிவியல் மற்றும் 
தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் நாம் பலவீனமாக உள்ளோம். நகர்ப்புறம் மற்றும்
கிராமப்புறத்திற்கு இடையிலான, பிரதேசங்களுக்கு இடையிலான வளர்ச்சி 
இடைவெளி இப்போதும் பெரிதாக உள்ளது; அவ்வாறே வருமான வேறுபாடு
களும் உள்ளன. சமூகப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன". சகலமும் பிர
மாதமாக இருக்கின்றன என்று ஜம்பம் பேசுவது பொதுவாக ஆட்சியாளர்களின் 
குணம். இவரோ எதையும் மறைக்கவில்லை; உள்ள நிலைமையை ஒப்புக்கொள்கிறார். இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில்தான் அவர்களது கனவுகளும் உள்ளன, அவற்றை அடைய முடியும் எனும் நம்பிக்கையும் உள்ளது. அதற்கு சீன கட்சி முன்வைக்கும் வழிமுறை இதுதான்: "இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான திறவுகோல் சீர்திருத்தத்தை தொடர்வதில் உள்ளது". இது வினோதமாகத் தெரியலாம். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை இதுவரை அடைந்த வளர்ச்சிக்கு காரணமான அந்த சீர்திருத்தம்தான் இப்போதுள்ள பிரச்னைகளையும் முடிவுக்கு கொண்டுவரும் என்று திடமாக நினைக்கிறார்கள். இது ஏதோ பொத்தாம்
பொதுவான அறிவிப்பும் அல்ல, இயந்திரகதியிலான வாய்ப்பாடும் அல்ல.
சீர்திருத்தத்தை தொடர்வது என்பதன் நடைமுறை அர்த்தத்தை கட்சி திட்டவட்ட
மான கூறுகளாக வகுத்துள்ளது.




9

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமா?

சீர்திருத்தத்தை தொடர்வது என்பதை சில திட்டவட்டமான முடிவுகளாக வகுத்தது 
சீன கட்சி. இது பற்றிய ஒரு விளக்கவுரையை ஜின்பிங் 2013 நவம்பரில் வழங்கினார். அதில் சில கூறுகள் அதி முக்கியமானவை. 1. சந்தை பற்றியது. "கடந்த 20 ஆண்டுகளில் ஒரு சோசலிச சந்தைப் பொருளாதாரம் கட்டமைக்கப் பட்டுள்ளது. 
இதை வளர்த்தெடுக்க சந்தை, அரசாங்கம் ஆகிய இரண்டுக்கும் அதனதன் 
வித்தியாசமான பணிகளில் ஊக்கம் தரப்பட வேண்டும்". இதன் பொருள் 
தேவை மற்றும் அளிப்பை மையமாக வைத்து இயங்கும் சந்தை என்பது தொடர்
ந்தாலும் அதை முறைப்படுத்தும் அரசாங்க தலையீடுகளும் தொடரும் என்பதா
கும். அவர் கூறினார் : "ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை 
பராமரித்தல், பொதுச் சேவைகளை வலுப்படுத்துதல், நியாயமான போட்டியை 
உறுதி செய்தல்...போன்றவை அரசாங்கத்தின் பிரதான கடமையாக இருக்கும்". 
அதாவது சந்தை இல்லாத சமூகமும் அல்ல அல்லது சந்தை பார்த்துக்கொள்ளும் 
என்றிருக்கும் விட்டேற்றியான அரசாங்கமும் அல்ல. இரண்டு கூறுகளையும் உள்ளடக்கிய புதுவகை. 2. உடமை பற்றியது. "பொதுவுடமை நிறுவனங்கள் பிரதான 
பங்கு வகிக்கின்ற, அக்கம்பக்கமாக இதரவகை உடமை நிறுவனங்கள் வளருகி
ன்ற அந்த அடிப்படையான பொருளாதார முறைமையே சீன தன்மைகளுடனான 
சோசலிச முறைமையின் ஒரு முக்கியமான தூண்". இதன் அர்த்தம் தெளிவானது. 
சீனாவில் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மய படுத்தப்படவில்லை.மாறாக 
பொதுத்துறை, தனியார்துறை இரண்டுக்கும் பங்குதருகிற ஒரு பன்மைப் பொரு
ளாதாரம் வளர்த்தெடுக்கப்படுகிறது. "அரசுத் துறை நிறுவனங்கள் நவீனத்தை 
முன்னெடுப்பதிலும், மக்களின் பொதுநலன்களைப் பாதுகாப்பதிலும் ஒரு முக்கியமான சக்தியாகத் திகழுகின்றன. பொதுச்சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் அரசு மூலதனம் அதிகரிப்பதையும், இயற்கைவள ஏகபோக தொழில்களில் அரசு மூலதனம் பிரதானமாக இருப்தையும் நாம் உறுதிசெய்யவேண்டும்" என்றார் ஜின்பிங். சீனாவில் சகலமும் தனியார்மயமாகிவிட்டது, இந்தியாவில்தான் அதை கம்யூனிஸ்டுகள் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனும் பிரச்சாரம் எவ்வளவு பொய்மையானது என்பதை இதிலிருந்து உணரலாம்.





10

குடும்ப விவசாயத்திலிருந்து கூட்டுறவு விவசாயத்திற்கு

3. கிராமப்புறம் பற்றியது. நகர்ப்புறம் வளர்ந்த அளவிற்கு கிராமப்புறம் வளர
வில்லை. இரண்டுக்குமான இடைவெளி இன்னும் சுருங்கவில்லை.1978 க்கு 
பிறகு விவசாயிகள் வாழ்விலும் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதி
லும் நகர்ப்புறத்தோடு ஒப்பிடும்போது குறைவுதான். இந்த இடைவெளியை 
குறைக்க சீனகட்சி வகுத்துள்ள திட்டம்: "ஒரு புதுவிதமான விவசாய முறைமை
யை கட்டமைப்பதை வேகப்படுத்துவது. விவசாயத்தில் குடும்ப செயல்பாடு 
எனும் அடிப்படை அம்சத்தை நாம் பராமரிப்போம். அதேநேரத்தில் நிலத்தை 
பயன்படுத்தும் ஒப்பந்த உரிமையை பெரிய, நிபுணத்துவம் பெற்ற குடும்ப பண்ணைகள், விவசாய கூட்டுறவுகள் மற்றும் விவசாய தொழிலகங்கள் ஆகியவற்றுக்கு மாற்றித் தருவதை ஊக்குவிப்போம். கிராமப் பகுதிகள் கூட்டுறவு பொருளாதாரங்களாக வளர ஊக்குவிப்போம். நவீன பயிர்வளர்ப்பு தொழிலகங்களை வளர்க்க தொழில் மற்றும் வணிகமூலதனம் கிராமப்புறத்திற்கு செல்ல 
ஊக்குவிப்போம்". சீனாவில் நிலம்எல்லாம் அரசுக்கே சொந்தம். இது புரட்சியின் 
ஒரு முக்கியமான சாதனை; இது தொடர்ந்து பராமரிக்கப் படுகிறது என்பதை 
கவனிக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ஒரு குறிப்பிட்ட 
அளவு நிலம் வேளாண்மைக்கான ஒப்பந்த உரிமையாக அரசு வழங்கியுள்ளது. 
இது நிலம் துணடாடப்படலுக்கு இட்டு சென்றுள்ளது. இதனால் நவீன வேளாண்
கருவிகள் மற்றும் செய்முறைகளைப் பயன்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. 
இந்தப் பிரச்னையைத் தீர்த்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தம் 
உரிமையை விட்டுக் கொடுக்காமலேயே விவசாயிகள் நிலங்களை ஒன்றுசேர்க்
கும் வேலைக்கு முன்னுரிமை தருகிறது இந்ததிட்டம். இது இயல்பாகவே விவசா
யிகள் நெஞ்சில் தம் உரிமை பறிபோகுமோ எனும் பயத்தை உருவாக்கவல்லது. 
ஆகவே அடுத்து இது வருகிறது: "விவசாயிகளுக்கு கூடுதல் சொத்துரிமைகள் 
தரப்படும். விவசாயிகளின் நிலப் பயன்பாட்டுக்கான ஒப்பந்தஉரிமை சட்டத்தால் பாதுகாக்கப்படும். கூட்டு பொருளாதார அமைப்புகளின் உறுப்பினர்கள் என்ற வகையில் விவசாயிகளுக்கு இருக்ககூடிய உரிமைகளும் நலன்களும் பாதுகாக்
கப்படும்". இன்றைய காலகட்டத்தில் பொருளாதார ஊக்குவிப்பு இல்லையெனில் 
மனிதர்கள் உற்பத்தியை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். இது விவசா
யிகளுக்கும் பொருந்தும். அதை உணர்ந்துதான் வழங்கப்பட்டுள்ள நில குத்தகை உரிமையை பராமரித்துக்கொண்டே கூட்டு மற்றும் கூட்டுறவு பண்ணை முறை
களை நோக்கி விவசாயிகளை அரசு வழிநடத்துகிறது.



11

மூன்றாவது தொழிற்புரட்சி எந்திரன் புரட்சி..!

2014 ஜூனில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் மத்தியில் ஷி ஜின்பிங் 
பேசியபேச்சு முக்கியமானது. அது சீனாவின் எதிர்காலம் மட்டுமல்லாது உலகின் 
எதிர்காலமே புதியகண்டுபிடிப்புகளை நோக்கிய வளர்ச்சியை நம்பி இருக்கிறது 
என்பதை சுட்டியது. "நமது எதிர்காலத்தை மற்றவர்களின் இறந்தகாலத்தைக்
கொண்டு அலங்கரிக்க முடியாது" என்றார் அவர். பிரெஞ்ச் எழுத்தாளர் விக்டர் 
ஹியுகோவின் கீழ்வரும் கூற்றை மேற்கோள் காட்டினார்: "கண்டுபிடிக்க வேண்டி
யவற்றை நினைத்துக் கொண்டால் ஏற்கெனவே கண்டுபிடிக்கப் பட்டவை முக்கியத்துவமற்றவை". அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு சீன கட்சி தரும் முக்கியத்துவத்தை இதிலிருந்து உணரலாம். "உலகில் வசதியான நாடுகளது மக்கள் தொகை சுமார் 100 கோடி. சீனாவின் மக்கள் தொகை130 கோடி. நமதுநாடும் வசதியானதாய் மாறினால் உலகில் வசதியானவர்கள் எண்ணிக்கை இருமடங்கிற்கும் அதிகமாகும். 
இப்போதய வசதியானவர்களைப் போல நாமும் உற்பத்திக்கான எனர்ஜியை-சக்தி
யை- நுகர ஆரம்பித்தால் உலகின் தற்போதய சக்தி ஆதாரங்கள் போதாது. பழைய பாதை முடிந்து விட்டது. புதிய பாதை எது? அது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்
தில் புதியகண்டுபிடிப்புகள் எனும் பாதை, முதலீட்டை நோக்கிய வளர்ச்சி என்பதற்கு
பதிலாக கண்டுபிடிப்பை நோக்கிய வளர்ச்சி எனும் பாதை". இதைப் படித்தவுடன் 
எனக்கு தேன்றியது, இந்தியாவின் 120கோடி மக்களும் முன்னேறும்போது சக்தியின் 
தேவை இன்னும் அதிகமாக இருக்குமே, அப்போது கண்டுபிடிப்புகளின் தேவை இன்
னும் அதிகமாக மாறுமே என்பதுதான். ஆக புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்
துவம் தரும் ஆளுங்கட்சி சீனாவில் இருக்கறது. "மூன்றாவது தொழில்புரட்சி ரோபோ (எந்திரன்)புரட்சியாக இருக்கும் , அது உலகத்தொழில் உற்பத்தி பாணியை மாற்றி அமைக்கும்" எனும் நிபுணர்களின் கருத்தையும் எடுத்துக் காட்டியிருக்கிறார் ஜின்பிங். 
சீனாவின் வளமானஎதிர்காலத்தை கட்டியமைப்பதில் உறுதியோடு இருக்கிறது அந்த நாட்டின் தலைமை. அதற்கான திட்டவட்டமான சமூக-பொருளாதார நிகழ்ச்சிநிரலை
யும் அது கொண்டிருக்கிறது என்பதை அந்த நூல் மூலம் என்னால் பூரணமாக உணர 
முடிந்தது. இத்துறையில் அது ஈட்டப் போகும் வெற்றிதான் அதன் தற்போதய அரசியல் 
கட்டமைப்புக்கும் நிலைத்தன்மையைத் தரும் என்று எனக்கு பட்டது. 

(முற்றும்)




Comments