தமிழர் உரிமை மாநாட்டுச் சிந்தனைகள்

தமிழர் உரிமை மாநாட்டுச் சிந்தனைகள்

1

ஆங்கிலத்தின் இடத்தில் இந்தி: சமன்நிலை பறிபோனது

ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் இருந்தது, அவர்கள் போன பிறகு இந்தியர்களின் மொழியாம் இந்திதானே இருக்க வேண்டும் என்பது எளிமையான விடையாகத் தெரியலாம், ஆனால் உண்மையான விடை அல்ல. இந்தியர்களின் மொழி இந்தி மட்டுமல்ல. சுத்தமான இந்தி பேசுவோர் இந்திய மக்களில் 25% பேர்தான். 

அதன் இதர வடிவங்களைப் பேசுவோரையும் சேர்த்தால்கூட 45% பேர்தான். அதாவது இந்தி பேசாதவர்கள்தாம் பெரும்பான்மையோர்; 55% பேர். உங்களுக்கு தெரியுமா? இந்தியாவின் 29 மாநிலங்களில் இப்போதும் 9 மாநிலங்களில்தான் இந்தி அலுவல்மொழி; மற்ற மாநிலங்களில் எல்லாம் வேறுமொழிகள்! ஆங்கிலம் மத்திய அரசின் அலுவல் மொழியாக இருந்தபோது அது அனைத்து இந்தியர்களுக்கும் பொதுச் சுமையாக இருந்தது. 

இந்தியை அலுவல் மொழியாக்கினால் அது இந்திக்காரர்களுக்கு வசதியாகவும்,இந்தி பேசாதவர்களுக்கு சுமையாகவும் மாறிப் போகும், இருந்த ஒருவித சமன்நிலை பறிபோகும். அதனால்தான் அரசியல்சாசன சபையில் அன்று இந்தியை மத்திய அரசின் அலுவல்மொழியாக்க கடும்எதிர்ப்பு எழுந்தது. 

அதையும் மீறித்தான் இந்தி அந்த அந்தஸ்தைப் பெற்றது. அரசியல் சாசனத்தின் சரத்து  343 கூறுகிறது: "ஒன்றியத்தின் அலுவல் மொழி தேவநாகரி வரிவடிவத்திலான இந்தி மொழி". இப்படியாக இந்தி பேசாதவருக்கான அநீதி அரசியல்சாசன ரீதியாகவே ஆரம்பமானது. 


2

இந்தியை திணிக்க, வளர்க்க தனி ஏற்பாடுள்

த்திய அரசின் அலுவல் மொழி இந்தியே என்று அரசியல் சாசனத்தில் பொறித்து
விட்டாலும் அதை உடன் அமுல்படுத்த முடியாது என்பதை அறிந்திருந்தார்கள் ஆட்சியாளர்கள். எனவே "15 ஆண்டு காலத்திற்கு ஆங்கிலம் தொடரும்" என்றும்,"தேவைப்பட்டால் சட்டத்தின்மூலம் 15 ஆண்டுகாலத்திற்கு பிறகும் ஆங்கிலத்தை தொடரலாம்"
என்றும் அரசியல் சாசனத்தின் அதே சரத்து 343லேயே எழுதி வைத்தார்கள். 

அவர்களின் ஆசையும் யதார்த்தமும் அப்போதே மோதத் துவங்கின. இடைக்காலத்தில் "இந்தியின் பயன்பாட்டை மத்திய அரசின் அலுவல் நோக்கங்களுக்கு விரிவுபடுத்த கமிசன் அமைக்கப்பட வேண்டும்" (சரத்து344) என்றார்கள். அதாவது தானாக ஒருபோதும் இந்தி அலுவல் மொழியாக மாறாது, திணிப்பு மூலமே அதை நடத்த முடியும் என்று தெளிந்திருந்தார்கள். 

இதிலே சரத்து 351 கவனிக்கப்பட வேண்டியது. அது மத்திய அரசுக்கு ஒரு "சிறப்பு வழிகாட்டலை" தந்தது. அது வருமாறு: "பிரதானமாக சமஸ்கிருதத்திலிருந்தும், இரண்டாம்பட்சமாக இதர மொழிகளிலிருந்தும் தேவையான மற்றும் விரும்பத்தகுந்த வார்த்தைகளைக் கொண்டு இந்தியை வளர்க்க வேண்டும்". ஆக இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக இயங்கத்தக்க நிலையில் அந்த 1950ல் இந்தி இல்லை என்பதை ஆட்சியாளர்களே உணர்ந்து அதை வளர்த்தெடுக்கும் வழிமுறைக்குள் இறங்கினார்கள். 

அதுவோ இந்தியை சமஸ்கிருத மயமாக்குவதாக இருந்தது! சரி, அடுத்த 15 ஆண்டுகளில் என்ன நடந்தது? இந்தி இந்தி
யாவின் அலுவல் மொழியாகும் அளவுக்கு வளர்ந்ததா? 


3
தீரர்களின் தியாகத்தால் கிடைத்த ஒரு பாதுகாப்பு 

1965 நெருங்கிக் கொண்டிருந்தது. 1963 லேயே மத்தியஆட்சியாளர்களை மொழி பிரச்னை பீடித்துக் கொண்டது. ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியை மட்டும் 
அலுவல் மொழியாக்கும் தைரியம் அவர்களுக்கு வரவில்லை, அப்படி அது வளர்
ந்து விட்டதாக அவர்கள் நினைக்கவில்லை. அந்த நிலைதான் உச்சநீதிமன்ற 
அலுவல் மொழியைப் பொறுத்தவரையிலும்கூட.  சரத்து 348 கூறியது: " வேறு மாதிரியாக நாடாளுமன்றம் சட்டம் இயற்றும் வரை உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும்". இதை மாற்றவும் அவர்கள் துணி
யவில்லை. அந்த ஆண்டிலேயே "அலுவல் மொழிகள் சட்டம்" ஒன்றை இயற்றினா
ர்கள். அதன் சரத்து  3 கூறியது : "15 ஆண்டுகள் கழிந்த பிறகும்கூட இந்தியோடு 
சேர்த்து ஆங்கிலத்தையும்  தொடர்ந்து பயன்படுத்தலாம் ". இந்த "லாம்"(மே )என்ப
தற்கு பதிலாக "வேண்டும்"(ஷேல்) எனும் வார்த்தையைப் போட வேண்டும் எனும் 
வாதம் இதனால்தான் எழுந்தது. எப்படியோ மத்திய ஆட்சியாளர்களே ஆங்கிலம் 
தொடரும் எனச்சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.ஆனாலும் அதுவொரு இடைக்கால ஏற்பாடே, இடையில் இந்தி திணிப்புவேலை கனஜோராக 
நடக்கும், இந்தியை மட்டுமே அலுவல் மொழியாக ஆக்குவதுதான் அவர்களது 
ஆசை என்பதும் அந்த"லாம்" மூலம் வெளிப்பட்டது. அதனால்தான்1965ல் தமிழகத்
தில் மாணவர்களது இந்திதிணிப்பு எதிர்ப்புபோராட்டம் வெடித்தது. தமிழகத்தில் காஙகிரஸ் ஆட்சியை இழந்ததற்கும், திமுக அதைக் கைப்பற்றியதற்கும் ஒரு முக்கிய காரணமாய் அமைந்தது. அதன் பிறகுதான் மத்தியஆட்சியாளர்கள் இறங்கி  வந்தார்கள்.1968ல்சேர்க்கப்பட்ட துணைசரத்து3(5) "இந்தியை அலுவல்மொழியாக கொள்ளாத மாநிலங்களதுசட்டமன்றங்கள் எல்லாம்  ஆங்கிலத்தின் பயன்பாட்டை கைவிடுவதாக தீர்மானம் நிறைவேற்றும்வரை அது தொடரும்" என்றது. இதுதான் 
ஆங்கிலத்திற்கு கிடைத்த பாதுகாப்பு. இதை அடைய தமிழகத்தில் பெரும்போராட்டங்கள் தேவைப்பட்டன, எத்தனையோ தீரர்கள் தியாகிகளாக வேண்டியிருந்தது. 
அவர்கள் எல்லாம் இவ்வேளையில் நினைக்கப்பட வேண்டியவர்கள். 




4

ஆர்எஸ்எஸ்சின் அடிப்படைக் கொள்கையே இந்தி திணிப்புதான்..

இந்தியே மத்திய அரசின் அலுவல் மொழி என்று அரசியல்சாசனத்தில் இருந்தாலும் நடைமுறையில் இந்தி, ஆங்கிலம் இரண்டும் அந்தப் பணியை ஆற்றி வந்தன. இதையும் ஒழித்து இந்தியைமட்டுமே அலுவல்மொழி ஆக்குவதுதான் மத்திய ஆட்சியாளர்களின் நோக்கம். காங்கிரஸ்காரர்கள் இது விஷயத்தில் தயங்கித்தயங்கி நடை போட்டார்கள் என்றால் பாஜககாரர்கள் வேகநடை போடுகிறார்கள். காரணம் இவர்களின் குருபீடமாம் ஆர்எஸ்எஸ் சின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று இது.1958ல் அது இயற்றிய தீர்மானம்: "மாகாணங்களுக்கு இடையிலான தொடர்புக்கான பொதுமொழியாக அண்மைக்காலத்தில் இந்தி உருவாகிவிட்டது.இப்படியாகவே அனைத்து அலுவல்நோக்கங்களுக்கும் அதையே பயன்படுத்த வேண்டும். பிராந்திய மொழிகளை அந்தந்த பிராந்திய அளவில் பயன்படுத்த வேண்டும். சமஸ்கிருதத்தின் அடிப்படையிலேயே அனை
த்து மொழிகளையும் வளர்க்கமுடியும் என்பதால் அதன்படிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்".( ஆர்எஸ்எஸ் ரிசால்வ்ஸ்) மோடி அரசின் புதிய கல்வித் திட்டத்தில் சமஸ்கிருத படிப்புக்குமட்டும் தனிமுக்கியத்துவம் கொடுக்கபபட்டதன் காரணம் 
இதுதான். இதேகாரணத்தால்தான் காங்கிரஸ்ஆட்சி காலத்திய நாடாளுமன்ற குழு கொடுத்த இந்தி திணிப்பு ஆலோசனைகளைத் தீவிரமாக அமுல் படுத்தி வருகிறது. குறிப்பாக சிபிஎஸ்இ பாடத்திட்டபள்ளிகளில் எல்லாம் இந்தி கட்டாயமாகி விட்டது. அப்புறம் மந்திரிகள் எல்லாம் இனி இந்தியில்தான் பேசுவார்கள். தமிழ்நாட்டு மைல்கல் வரை இந்தி வந்தது. தமிழ்நாட்டு ஏடிஎம் களில்கூட இந்தி. காங்கிரஸ் ஆட்சியாளர்களை போலவே இவர்களும் நாடாளுமனறத்தில் இந்தி,ஆங்கிலம் தவிர பிறமொழிகளில் பேச உடனுக்குடனான மொழிபெயர்ப்புவசதி 
செய்துதர மறுக்கிறார்கள். தமிழகஉயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல்மொழியாக்க அரசியல்சாசனத்தில் (சரத்து348-2) இடமிருந்தும் இவர்கள் மனதில் இடமில்லை. அதற்கும் நம் தமிழ்த்தாய் இன்னும் கையேந்திய வண்ணம் உள்ளாள்.இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? 



5

இந்தி படிக்காததால் தமிழகம் பின்னோக்கிப் போனதா?

"இந்தி படிக்காததால் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது" என்று 
வருத்தப்பட்டார் டி வி விவாதத்தில் ஒரு பிரபல எழுத்தாளர். இதன் பொருள் இந்தி
தான் மத்தியில் அலுவல்மொழி என்றால், அதன் திணிப்புதான் நடப்பு என்றால் 
அதை தமிழகம் ஏற்றிருக்கவேண்டும், அதுவே மொழிப் பிரச்னைக்கு தீர்வு என்பது. 
அதாவது தமிழரின் நியாயமான உரிமையைக் கைவிட்டு இந்தி வெறியர்களிடம் அடிபணிந்திருக்க வேண்டும் என்பது. இந்த கோழைத்தனமான சிந்தனையை நம் தமிழர்கள் ஏற்காதது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். அதுமட்டுமல்ல.

யதார்த்தம் என்ன? இந்தி படிக்காததால் தமிழகம் பின்னோக்கிப் போகவில்லை. மாறாக ஆங்கிலம் படிக்காததால் தாங்கள் பின்னோக்கிப் போய்விட்டதாக உ பி காரர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு இப்போது முதலாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் சொல்லித்தர ஆரம்பித்திருக்கிறார்கள்.அது அவசியம்என்று அதன் சாமியார் 
முதல்வரே பேட்டி கொடுத்திருக்கிறார். இன்னும் வினோதம் என்னவென்றால் தமிழ
கத்தைவிட இந்திபேசும் மாநிலங்கள் தொழில்துறையில் பின்தங்கியிருப்பதால் 
இங்கு வேலை கேட்டு கூட்டம்கூட்டமாக வருகிறார்கள். வந்தவர்கள் கொஞ்சம் கொ
ஞ்சம் தமிழ்கற்று சமாளிக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க நாம் ஏன் இந்திதிணிப்பை ஏற்க வேண்டும் எழுத்தாளரே? விரும்புகிறவர்கள் இந்தி கற்க இங்கே தடையில்லை. அதை சொல்லித்தர "இந்தி பிரச்சார சபை"யும் இருக்கிறது. ஆனால் நம்வீட்டு பிள்ளைகள் எல்லாம் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என மத்தியஅரசு சொல்வது மொழி படையெடுப்பு. அதைச் சுயமரியாதை உள்ள எந்தத் தமிழனும் ஏற்க மாட்டான். பிறகு, இந்தத் தாக்குதலை எப்படி எதிர் கொள்வது? 



6

22 மொழிகளையும் மத்தியில் அலுவல் மொழிகளாக்குக

இந்தி திணிப்பின் மூல ஊற்று மத்திய அரசின் அலுவல் மொழி இந்தி என்று 
அரசியல் சாசனத்தில் பொறித்திருப்பது. அதற்குப் பதிலாக அதன் எட்டாவது 
அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழிகள் என்று ஆக்க
வேண்டும். இது சாத்தியமா என்று கேட்கக் கூடும். சாத்தியமே இந்த கணினி 
யுகத்தில். இந்தியாவோடு ஒப்புநோக்கத்தக்கது ஐரோப்பிய ஒன்றியம். அதன் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகள் 24 . அதன் பல செயல்பாடுகள் இத்தனை மொழிகளிலும் நடக்கின்றன. 

அதற்கான மொழிபெயர்ப்பு வசதிகள் உள்
ளன. இதை நாம் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். 22 மொழிகள் பேசு
வோரின் வரிப்பணத்தில் இயங்கும் இந்தியஅரசு அத்தனை மொழிகளிலும் 
இயங்குவதுதான் நியாயம். இந்தியில் மட்டுமே இயங்கும் என்பது இந்தியத்
தாய் செய்யும் காரியம் அல்ல. பிற குழந்தைகளின் உணவையும் தன் குழந்தை
க்கே தருகிற கொடுமைக்கார சித்தியின் வேலை. இல்லை, இந்த காலத்திலும்
22 மொழிகளை அலுவல் மொழிகளாக்குவதில் சிரமம் உண்டு என்றால் அவற்றுக்கு அரசியல்சாசன அந்தஸ்தைக் கொடுத்துவிட்டு, படிப்படியாக நடப்புக்கு கொண்டுவரலாம். உதாரணமாக, 5 கோடி பேருக்கு மேல் பேசுகிறவர்களைக் 
கொண்ட மொழிகள் இந்தி, வங்காளி, தமிழ், தெலுங்கு, மராத்தி, உருது எனும்  
6 மொழிகள். முதல்கட்டமாக, இவற்றுக்கு நாடாளுமன்றத்திலும் இதர இடங்களி
லும் உடனுக்குடன் மொழிபெயர்ப்பு ஏற்பாடுகளை உருவாக்கலாம். 1 கோடிக்கு
மேல் பேசுகிறவர்களை கொண்ட மொழிகள் குஜராத்தி, கன்னடா, மலையாளம்,
ஒடியா, பஞ்சாபி, அஸ்ஸாமி, மைதிலி எனும் 7 மொழிகள். இரண்டாம் கட்டமாக 
இந்தமொழிகளுக்கு அந்தஏற்பாடுகள். 

மூன்றாம் கட்டமாக இதர 9 மொழிகளுக்கு 
அந்தஏற்பாடுகள். இடைக்காலத்தில் ஆங்கிலம் கூடதல் அலுவல்மொழியாக இய
ங்கும். இப்படியாக இந்தியாவின் மொழிப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண முடியும். 

மனமிருந்தால் நிச்சயம் மார்க்கம் உண்டு. பிரச்னை என்னவென்றால் ஆட்சி
யாளர்களுக்கு நியாயமனம் இல்லை என்பதுதான். அவர்கள் தமிழ் உள்ளிட்ட.பிற 
மொழிகளின் தலையில் கைவைத்து இந்தி ஆதிக்கத்தை கொண்டுவரப் பார்க்கி
றார்கள். 

இதன் பக்கவிளைவு என்னவெனறால் இந்தி பேசாதவர்கள் ஆங்கிலத்தின் தயவை நாடும் போக்கு அதிகரித்தது. அதனால் இந்திய மொழிகளின் வளர்ச்சி தேங்கிப்போனது. 




7
நமது மொழி உரிமைக் கோரிக்கைகள்

1.இந்தி மட்டுமே மத்திய அரசின் அலுவல் மொழி என்பதற்குப் பதிலாக எட்டாவது
அட்டவணையின் 22 மொழிகளையும் அலுவல் மொழிகள் ஆக்கவேண்டும். 
அதைப் படிப்படியாகவேனும் அமுல்படுத்த வேண்டும்.

2.கூடுதல் அலுவல்மொழி ஆங்கிலம் எனும் இடைக்காலஏற்பாடு தொடரவேண்டும். 
3.இந்தியை வளர்ப்பதற்கான நாடாளுமன்றக்குழு 22 மொழிகளையும் வளர்ப்பதற்கான நாடாளுமன்றக் குழுவாக மாற்றியமைக்கப்பட வேண்டும். 

4.தமிழக உயர்நீதிமன்றத்தின் அலுவல்மொழியாகத் தமிழ் அங்கீகரிக்ப்படவேண்டும் எனும் தமிழகத்தின் கோரிக்கையை மத்தியஅரசு உடன் ஏற்று அமுல்படுத்த வேண்டும்.

5.இந்தித் திணிப்பு வேலைகள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும்.

6.நாடாளுமன்றத்தில் நினத்தவுடன் தமிழில் பேச உடனுக்குடனான மொழிபெயர்ப்பு வசதி செய்யப்பட வேண்டும். 

7.தமிழில் கடிதம் எழுதவும், அதற்கான பதிலைத் தமிழில் பெறவும் தமிழக அரசுக்
குள்ளஉரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அதற்கான மொழிபெயர்ப்பு வசதிகள் 
மத்திய அரசில் இருக்க வேண்டும்

8.தமிழகத்தில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தமிழில் 
இயங்க வேண்டும். 

9.சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்பது ரத்து செய்யப்பட்டு 
அங்கே தமிழ் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். 

10.மொழியோடு சம்பந்தப்பட்டது கல்வி. அதைப் பொதுப்பட்டியலுக்கு கொண்டு
போய் இந்தியைத் திணிக்கிறார்கள், நீட்தேர்வு போன்றவற்றை நம் மீது சுமத்துகி
றார்கள்.எனவே கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். 

11.தமிழ் வளர்ச்சி தமிழர்கள் வளர்ச்சியின் முன்தேவை. எனவே தமிழக அரசு 
இதில் தனிக் கவனம்செலுத்த வேண்டும். நவீன காலத்திற்கு ஏற்ப தமிழை வளர்க்
கும் வழிமுறைகளை தமிழறிஞர்கள், மொழி அறிஞர்கள் மற்றும் தொழில்நுடபவிய
லாளர்களுடன் கலந்து பேசி ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கி அதை உளப்பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும். 
இவையெல்லாம் எடுத்துக்காட்டுகளே. தோழர்கள் மேலும் செழுமைப்படுத்தலாம். 



8

தமிழர் வரலாற்றில் மண்ணள்ளிப் போடுவது ஏன்?

2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தனித்துவமான நாகரிகத்தை கொண்டிருந்தவர்கள்தமிழர்கள் என்பதை சங்க இலக்கியம் எடுத்துரைத்தது. ஆனாலும் அது இலக்கியம்தானே, உண்மை எவ்வளவோ, கற்பிதம் எவ்வளவோ என்று சந்தேகம் கிளப்பியவர்கள் உண்டு. அதைப் போக்கியது கீழடி அகழ்வாய்வு. அன்றே ஒரு நகரநாகரிகம் வைகைநதி தீரத்தில் இருந்ததை புதைந்த அந்த நகரம் பூதமென வெளிக்கிளம்பி வந்து நிரூபித்தது. அதிலே மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது மோடி அரசு. அகழாய்வில் வெளிப்பட்ட கட்டமைப்பை மீண்டும் மூடிவிட்டார்கள். அதற்கு முன்பே அதைப் பார்க்கும் பாக்கியம் எனக்குகிடைத்தது. அன்றே தமிழன் சில தொழில் நுட்பங்களை அறிந்திருந்தான் என்பதை அது காட்டியது. அதில் கண்டெடுக்கப்பட்ட பலநூறு பொரு
ட்கள் சங்கஇலக்கிய வாழ்வை நிரூபிக்கும் பௌதீகசாட்சியங்கள். அவற்றின் ஈராயிர
மாண்டு தொன்மையும் அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப் பட்டிருக்கிறது. ஓர் இன
மக்களின் தொன்மையை பறைசாற்றும் இப்படியொரு வரலாற்று ஆதாரம் கிடைத்
தால் எந்தவொரு அரசும் புளகாங்கிதமடைந்து அதை பாதுகாக்கவும், மேலும் ஆய்வு செய்யவும் முடிவு எடுக்கும் . ஆனால் மோடிஅரசோ அதை ஊத்திமூட சதிவேகைளில் இறங்கியதையும்,தமுஎகச அவற்றை எதிர்த்துபோராடியதையும் நாமறிவோம். இங்கு எழும் முக்கியமான கேள்வி, ஏன்இந்த வரலாற்று விரோதபோக்கு பாஜக அரசுக்கு? காரணம் பாஜகவின் குருபீடமாகிய ஆர்எஸ்எஸ் இந்தியா பல தேசிய இனங்களைக் கொண்ட நாடு என்பதையே ஏற்காதது. தமிழை,தமிழர்களை, தமிழ்நாட்டை ஏற்காதது. மொழிவாரி மாநிலங்கள் உருவான அந்த1956ல் அதைஎதிர்த்து தீர்மானம் போட்டது.

(ஆர்எஸ்எஸ் ரிசால்வ்ஸ்) அதே ஆண்டில் இவர்களது குருஜி கோல்வால்கர் இப்படி 
எழுதினார்: "நமது அரசியல்சாசனத்தின் சமஷ்டிகட்டமைப்பு பற்றியபேச்செல்லாம் 
குழிதோண்டிப் புதைக்கப்பட வேண்டும். தனித்தனியான, பிராந்தியவாரியான, 
தனித்த போக்குடைய, மொழிவாரியான அல்லது இதரவகைப் பெருமிதத்திற்கு வழி 
வகுப்பவைஎல்லாம் நமது ஒன்றுபட்ட தன்மைக்கு கேடு விளைவிப்பவை. இவற்றின் அடையாளமேஇல்லாத 'ஒரு நாடு, ஒருஅரசு,ஒரு நாடாளுமன்றம்,ஒரு நிர்வாகம்' என்பதைப் பிரகடனப் படுத்த வேண்டும்."

(சிந்தனைக் கொத்து) மொழி வழிப்பட்ட தேசிய இனங்களை கொண்ட நாடு எனும் இயல்பான யதார்த்தத்தை நிராகரித்து, அதனிடத்தில் ஒற்றைமத வழிப்பட்ட செயற்கையான தேசியத்தை திணிப்பதை லட்சியமாக கொண்டது ஆர்எஸ்எஸ்.

அதனால்தான் தமிழரின் தனித்த நாகரிகத்தை நிரூபித்த கீழடி மீது மண்ணள்ளிப் போடுகிறது அதன் பினாமி மோடி அரசு. இந்த உண்மையை 
நாம் அம்பலப்படுத்த வேண்டும். 



9

தமிழர் உணவு உரிமையும் பறிப்பு

"இந்து, இந்தி, இந்துஸ்தான்-ஏற்காதவர்கள் செல்க பாகிஸ்தான்" என்பது 
சங்பரிவாரிகள் வடமாநிலங்களில் தருகிற முக்கியமான கோஷம். இது அவர்களின் இந்தி திணிப்பையும், மதவழிப்பட்ட ஒற்றை தேசியத்தையும் உணர்த்துகிறது. ஆனால் இதிலுள்ள "இந்து" என்பது சாதாரணஇந்துக்கள் நினைத்துக் கொண்டிருக்கிற இந்து அல்ல. 

அப்படியிருந்தால் அவர்கள் மாமிசஉணவு மீது இவ்வளவு வெறுப்பை காட்டுவார்களோ? "கர்ப்பிணிகள் மாமிசம் சாப்பிடக் கூடாது" என்று பிரசுரம் போடுகிறது மோடிஅரசு. "அதை சாப்பிட்டால் புற்று நோய் வரும்" என்று பயமுறுத்துகிறார் அதன் மந்திரி
ஒருவர். 

இறைச்சிக்கு மாடுகளை விற்கக் கூடாது என்பது துவக்கம்தான். அதை அனைத்துவகை இறைச்சிகளுக்கு எதிராகவும் கொண்டுவந்து நிறுத்த போகிறார்கள். மாமிசஉணவு மீது அருவருப்பு என்பது சாதாரண இந்துமதம் சார்ந்தது அல்ல. காரணம் அதில் உள்ள ஆகப்பெரும்பாலோர் மாமிச
உணவுப்பிரியர்கள். 
அவர்கள் வணங்கும் தெய்வங்களுக்கும் அதுவே படைக்கப் படுகிறது. இந்து மதமானது பல மதப் பிரிவுகளின் ஒரு கூட்டமைப்பு. 
அதிலுள்ள ஒரு சிறுபான்மைப் பிரிவினர்தான் மாமிச உணவை எதிர்ப்பவர்கள். அந்த மனுவாதிகள்தாம் ஆர்எஸ்எஸ் சை தம்வசம் வைத்து மோடி அரசையும் ஆட்டிப்படைப்பவர்கள். அதாவது, இறைச்சிக்கு மாடு விற்கக்கூடாது என்பதுபிற மதத்தவருக்கு மட்டுமல்ல இந்துக்களின் இதர பிரிவினருக்கும் எதிரானது. 

அந்தப்படியாக தமிழர்களிலும் ஆகப் பெரும்பாலோரின் உணவு உரிமை பறிக்கப்படுகிறது. நமது மொழிஉரிமை, வரலாற்றுஉரிமை, உணவுஉரிமை என பலதும் இன்று பறிபோய்க் கொண்டிருக்கிறது. இதற்கு மூல காரணம் ஆர்எஸ்எஸ் என்கிற மனுவாத பாசிச அமைப்பு போடும் அதிகார ஆட்டம். அதைத் தடுத்து நிறுத்தத்தான் "தமிழர் உரிமை மாநாடு". இதை வெற்றிபெறச் செய்வது தமிழர்களுக்கு காலம் இட்டுள்ள கடமை. 


(முற்றும்) 


Comments