உ பி தேர்தல் முடிவு காட்டுவது என்ன?




உ பி யில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 16 மாநகராட்சி மேயர்களில் 14 யும், 198 நகராட்சி தலைவர்களில் 67 யும், 438 நகர் பஞ்சாயத்து தலைவர்களில் 100யும்
ஆளும் பாஜக வென்றுள்ளது. அதாவது 652 பதவிகளில் 181 ஐதான் அது பெற்றுள்ளது. 128 பதவிகளை வென்று இதற்கு அடுத்தாக சமஜ்வாதி கட்சியும், 75 பதவி
களை வென்று பகுஜன் சமாஜ் கட்சி மூன்றாவதாகவும், 26 பதவிகளை வென்று காங்கிரஸ் நான்காவதாகவும் வந்துள்ளன. ஆக 229 இடங்களை மூன்று எதிர்க்
கட்சிகள் பெற்றுள்ளன.(தமிழ் இந்து)மாநகராட்சி மேயர்பதவி வெற்றியை வைத்து மட்டும் இது பாஜகவிற்கு கிடைத்த பெருவெற்றி என்று பத்திரிகைகள் கூறுவது
அவற்றின் சார்புத் தன்மையை காட்டுகிறது. அதேநேரத்தில், பாஜகதான் உ பியில் பிரதான அரசியல் சக்தியாக இப்போதும் உள்ளது என்பதையும் இது காட்டுகிறது.
"அடுத்த மக்களவை தேர்தலில் 80 இடங்களையும் கைப்பற்றுவோம்" என்று அந்த சாமியார் முதல்வரை இது பேச வைத்துள்ளது. செல்லாநோட்டு, ஜிஎஸ்டி எனும்
கொடுமைகளின் பாதிப்பை மதவெறியை கிளப்பிவிட்டு திசைதிருப்ப முடியும் பாஜகவால் என்பதை இது காட்டுகிறது. இதுதான் அது, பிற முதலாளித்துவ கட்சி
களைப் போன்றது அல்ல, மாறாக மனுவாத பாசிச குணம் கொண்டது, அதனால் இன்று உழைப்பாளி மக்களின் பிரதான எதிரியாக இருக்கிறது என்பதை உணர்த்
துகிறது. இத்தகைய கட்சி 2019லும் வெற்றி பெற்றால் நாடு நாசமாகும். தும்பை விட்டு வாலைப் பிடிக்க கூடாது. வெள்ளம் வருமுன் அணை கட்டுவதே அழகு.

Comments