கனவுகளின் மிச்சம் நூலுக்கு தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களின் விமர்சனம்



அருணன் தன்வரலாறு என்றதும் ஏ​தோ சுயபுராணமல்ல.

அவர் சிபிஎம் கட்சிக்கு வந்தது-. அவர் ஒரு எழுத்தாளராய் பரிணமித்தது..--எந்​தெந்த நுால்க​ளை எப்படி எழுதி​னேன் என்ப​தை ஒரு அரு​மையான அனுபவப்பகிர்வாக எழுதியுள்ளார்.

அவரது ஆழ்ந்த நூல் பயிற்சியும் களஆய்வுகளும் சிறந்த ப​டைப்புகளாக உருமாறியக​தைக​ளை ருசிகரமாய் ​சொல்லிச் ​செல்கிறார்.

அதிலும் 3000 பக்கங்க​ளைக்​கொண்ட காலந்​தோறும் பிராமணீயம் நூலுக்கான தரவுக​ளைத் ​தேடியது பிரம்மாண்டப் பணியாக விபரங்க​ளோடு விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான ஆதாரங்க​ளைத்​தேட பல நூல்க​ளை ஆய்வு ​செய்துள்ளார். அதில் ருசிகரமான தகவல்க​ளையும் அள்ளித் ​தெளித்துச் ​செல்கிறார். உதாரணமாக நந்தன் பிறந்த இடத்​தை ​சென்று ஆய்வு​செய்கிறார்.

அந்த இடம் மீநந்தன் காலனி என்று​பெயர். நந்தன் வாழ்விடத்​தை 1200 ஆண்டுகளுக்கு முன்பு ​சேக்கிழார்-- பற்றிய ​பைங்​கொடிச் சு​ரை​மேற்படர்ந்த பழங்கூ​ரையு​​டைப் புல்குரம்​பைச் சிற்றில் என்று பாடியுள்ளார்.

அது இன்றும் ஆயிரமாண்டுகளுக்குப்பின்னும் அ​தே பு​லைப்பாடியாக​வே உள்ளது--நந்தன் பரம்ப​ரையின் வாழ்நி​லை மாற​வேயில்​லை--என்று அருணன் வருந்தி எழுதுகிறார்.

சிதம்பரம் ​கோவிலில் தில்​லை பிராமணர்களின் அட்டூழியம் பற்றி--நந்தனின் சன்னதி​யை ஒழிக்க ​தெற்குவாச​லை​யே சுவர் எழுப்பி அ​டைத்த​தை கூறுகிறார். சுவாரசியமான நூல்-- ஒ​ரே மூச்சில் படித்து முடித்​தேன்.மறக்காமல் து​ணைநின்ற என்​போன்ற ​தோழர்க​ளையும் குறிப்பிட்டுள்ளார்.

எழுத நி​னைப்பவர்கள் வாசிக்க ​வேண்டிய நூல்இது.

300 பக்கம்-- 200 ரூ--வசந்தம் ​வெளியீட்டகம்
94422 61555 --மது​ரை

Comments